அழகிரிக்கு தகுதியில்லை! : முன்னாள் மேயர் மா.சு. தாக்கு

சென்னை

ழகிரியின் ஸ்டாலின் குறித்த விமர்சனத்துக்கு முன்னாள் மேயர் மா சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மேயருமான மா சுப்ரமணியன் தனது  தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்ற பணிகளுக்கான விழாவில் கலந்துக் கொண்டார். அதன் பின் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் ஸ்டாலின் தலைமை குறித்து அழகிரி விமர்சித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ஆர் கே நகர் தொகுதியில் பணம் அளிக்காததால் மு க ஸ்டாலின் திமுகவுக்கு ஒரு தலைநிமிர்வை கொடுத்துள்ளார்.   அவரின் தலைமை குறித்து கட்சியில் இல்லாதவர்கள் விமர்சிக்க தகுதியில்லை” எனக் கூறினார்.

நேரடியாக அவர் அழகிரியின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும்  அவரது  பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.