முன்னாள் அமைச்சர்  லாரன்ஸ் காலமானார்…

நாகர்கோவில்:

முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் காலமானார். இவர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் 1993 முதல் 1996 வரை அமைச்சராக இருந்தவர்.  மாவட்டச் செயலாளர், சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.

ஜெ மறைவுக்கு பிறகு திமுகவில் இணந்தார்.  தற்போது  திமுகவின் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

சட்டக்கல்வி பயின்ற லாரன்ஸ், சிறந்த பாட்மிண்டன் பிளேயர். குமாரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். தனது சொந்த ஊரில் பாட்மிண்டன் கிளப் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.  அவரது உடல், சொந்த ஊரான தக்கலையில் இன்று மாலையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.