முன்னாள் அமைச்சர் செ மாதவன் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு

சிவங்கை:

முன்னாள்  அமைச்சர் செ.மாதவன் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

வயது முதிர்வு காரணமாக  உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் மாதவனின் உடலுக்கு இன்று மாலை அவரது சொந்த ஊரான சிவகங்கையில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

85 வயதாகும் மாதவனுக்கு மனைவி மற்றும் 2 மகள், 1 மகன் உள்ளனர்.

ஏற்கனவே திமுக, அதிமுக கட்சிகளில் பணியாற்றி உள்ளார்.  கடந்த, 1967 முதல் 76 வரை அண்ணாதுரை, கருணாநிதி ஆட்சியில், சட்டம், தொழில் துறை அமைச்சராக இருந்தார். பின், 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். 1984ம் ஆண்டு திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

1996ம் ஆண்டு மீண்டும் திமுகவில் சேர்ந்தார். இறுதி வரை திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று மதியம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் உயிரி பிரிந்தது.

அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. இறுதி சடங்கில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.