சென்னை,

ஜெயலலிதா ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன்.

இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை தன் பெயரிலும் தன் மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் வாங்கியதாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது.

தற்போது அதிமுகவின் இரண்டு அணிகளும் தனித்தனியாக  ஆர்.கே.நகர் தேர்தலை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர், ராஜகண்ணப்பன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ் அணியின் பலம் மேலும் கூடியுள்ளது.