ந்தூர்

த்தியப் பிரதேச முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரேம்சந்த் போராசி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் மீண்டும் இணைந்துள்ளார்.

மத்தியப் பிரதேச மக்களவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலித் தலைவர்களில் ஒருவரான குட்டு என அழைக்கப்படும் பிரேம்சந்த் போராசி சுமார் இரு வருடங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.   அவர் காங்கிரஸில் இருந்த போது அவருக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

அப்போது குட்டு தம்மை ஜோதிராதித்ய சிந்தியா மிகவும் தொல்லைக்கு உள்ளாக்குவதால் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்தார்.  அதன்பிறகு அவர்  உஜ்ஜையின் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  தற்போது ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் சமீபத்தில் பாஜக வில் இணைந்தார்.

இந்நிலையில் இன்று குட்டு இரண்டே வருடங்களில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.  தற்போது மபி மாநிலத்தில் 24 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் ரிசர்வ் தொகுதியான சன்வார் சட்டப்பேரவை தொகுதியில் குட்டு போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.