உர்ஜித் படேல் ராஜினாமா நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அடி: மன்மோகன் சிங்

டில்லி

ர்ஜித் படேல் திடீரென ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது, நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அடியாகும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  தெரிவித்துள்ளார்.

நேற்று இந்திய ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் 4 நாட்களில் ரிசர்வ் வங்கி வாரியக்குழுக் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் 10 மாதங்களில் அவர் பதவிக்காலம் முடிய இருக்கும் போது அதற்கு முன்பே சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக உர்ஜித் படேல் அறிவித்தார்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில் , “உர்ஜித் படேலின் திடீர் ராஜினாமாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ரிசர்வ் வங்கியின் அடிப்படை கட்டமைப்பை மோடி தலைமையிலான அரசு சிதைக்க எடுத்த முயற்சியின் அறிகுறியாகவே நான் பார்க்கிறேன்.

அரசின் மதிப்பு மிக்க நிறுவனங்களை குறுகிய கால அரசியல் நலனுக்காக, அழிக்க முயல்வது மிகப்பெரிய முட்டாள்தனமாக இருக்கும்.  எனக்கு உர்ஜித் படேலின் ராஜினாமா செய்தி மிகப்பெரிய வேதனையைத் தருகிறது. படேலின் ராஜினாமா பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடியாகும். நமது நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களைசந்தித்து வரும் சூழலில், படேலின்ன் ராஜினாமா பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய அரசின் நிதி அமைப்புகள் மீது அக்கறை கொண்டவராக, மிகச்சிறந்த பொருளாதார நிபுணராக, பொருளாதார கொள்கைகளை நன்கு கட்டமைக்கும் திறமை உள்ளவராக விளங்கியவர் உர்ஜித் படேல்
பல மிகப்பெரிய நிறுவனங்களைக் கட்டமைக்க நீண்டகாலம் தேவைப்படும்,

அதே வேளையில் கண நேரத்தில் அதை அழித்துவிடமுடியும். நமது நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ரிசர்வ் வங்கி உள்ளிட்ட மதிப்பு மிக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்ற போது அதைக் குறுகிய அரசியல் லாபத்துக்காக அழிக்க நினைப்பது முட்டாள்தனம்.

ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கியின் கூடுதல் கையிருப்பை மத்திய அரசு கேட்பதாக துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கூறியிருந்தார். ரிசர்வ்வங்கி கவர்னர் ராஜினாமா செய்யமாட்டார் என்று எண்ணி இருந்தநேரத்தில் அது நடந்து விட்டது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது