முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்

புதுடெல்லி:
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அதிலிருந்து அவரது நிலை மோசமாகவே இருந்து வருகிறது.  அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் கூறும்போது, அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் நிலையாக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரணாப் முகர்ஜியின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் நிலையாக உள்ளன. வென்டிலேட்டர் ஆதரவுடன் உள்ள அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.