’’மாஜி’’ ஜனாதிபதி மனைவி இரங்கல் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் சண்டை! போலீசில் புகார்..

முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மனைவி விமலா சர்மா, டெல்லி சப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு குணமடைந்து வீட்டில், ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் 93 வயதான விமலா சர்மா கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார்.


ஞாயிற்றுக்கிழமை எஸ்.டி. சர்மா வீட்டில் இரங்கல் கூட்டம் நடந்துள்ளது.
அப்போது குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை மூண்டுள்ளது.
இரு தரப்பினரும் இது குறித்து துக்ளக் சாலை காவல் நிலையத்தில் ஒருவர் மீது மற்றவர் புகார் அளித்துள்ளனர்.
எஸ்.டி.சர்மாவின் பேத்தி அவந்திகா மேகான் என்பவர் அளித்த புகாரில், தனது தாய் மாமா மற்றும் அத்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
‘’ என்னையும், கணவரையும் சாதி ரீதியாக அவதூறாக திட்டினர், வீட்டை விட்டு வெளியே விரட்டினர்’’ என புகாரில் குறிப்பிட்டுள்ளார், முன்னாள் ஜனாதிபதி பேத்தி.
போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-பா.பாரதி.