வெறிச்செயல்:  ஒரு மணி நேரத்தில் 6 அப்பாவிகளை அடித்துக்கொன்ற முன்னாள் ராணுவீரர்

டில்லி:

ரு மணி நேரத்தில் ஆறு நபர்களை, ராணுவ வீர்ர் ஒருவர் கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் பல்வால் நகரைச் சேரந்தவர் நரேஷ்குமார். முன்னாள் ராணுவ வீரரனான இவருக்கு சமீபகாலமாக மனநிலை சரியில்லை என்ற கூறப்படுகிறது.

மருத்துவ மனை சிசி டிவியில் நரேஷ்குமார்

இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு பல்வால் நகரில் உள்ள மருத்துவமனைக்கு நரேஷ்குமார் வந்திருக்கிறார்.  அந்த மருத்துவமனையில் உறவினருக்கு துணையாக வந்திருந்த 35 வயது பெண்மணியை இரும்பு கம்பியால் கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண்மணி உயிரிழந்தார்.

உடனே அருகில் இருந்த சிலர் நரேஷ்குமாரை பிடிக்க முற்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர் தப்பினார். உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட, காவல்துறையினரும் அவரை தேடினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஒரு மணி நேரத்தில் நரேஷ்குமாரை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

ஆனால் இந்த ஒருமணி நேரத்துக்குள் மேலும் நான்கு பேரை நரேஷ்குமார் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றது தெரியவந்தது.

ஒரு மணி நேரத்தில் ஐந்து நபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அரியானா மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.