முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் மரணம்

கொல்கத்தா

முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் சத்ய சதான் சக்ரவர்த்தி மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் சத்ய சதான் சக்ரவர்த்தி.   இவர் தெற்கு கொல்கத்தா மக்களவை உறுப்பினராக 1980 ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதன் பிறகு 1991 ஆம் ஆண்டு முதல் 2006 வரை  சட்டப்ப்பேரவை உறுப்பினராக இருந்தார்.  அத்துடன் இவர் மேற்கு வங்க அமைச்சரவையில் அமைச்சர் பதவியும் வகித்துள்ளார்.

கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு சத்ய சதானின் மனைவி மரணம் அடைந்தார்.  மனைவியின் மரணத்துக்கு பிறகு இவர் தனது மகளுடன் வசித்து வந்தார்.  தற்போது 85 வயதாகும் சத்ய சதானுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்.   அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் இறப்புக்கு பல அரசியல் தலைவர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.