டெல்லி: நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவம், பொறியியல் படிப்புக்காக நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தலாம் என்று கடந்த 17ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதற்கேற்ப நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. ஜேஇஇ தேர்வு நடைபெற்று வருகிறது.

இந் தநிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா  ஆகிய 6 மாநிலங்கள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தன.

கொரோனா சமயத்தில் மாணவர்கள் வாழ்வாதார உரிமையை நீதிமன்றம் பாதுகாக்க தவறி இருக்கிறது. தேர்வு நடத்தும் சிக்கல்களை புறக்கணித்து இருக்கிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.  மனுவை  தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.