கல்வித்துறையில் சிறப்பான மாற்றம்: தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு

சென்னை:

தேச துரோக வழக்கில் கைதாகி சிறை சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ, 52 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு இன்று  சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலையானார்.

அவரை தொண்டர்கள் வைகோ வாழ்க என்று கோஷமிட்டு வரவேற்றனர்.

விடுதலையான வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கல்வித்துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும், நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதற்காக தமிழக அரசை பாராட்டுவதாக கூறினார்.