இலங்கை உள்நாட்டு குழப்பம்: ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு

கொழும்பு:

லங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் முடிவு செய்திருப்பதாக அறிவித்து உள்ளனர்.

இலங்கையில் ரணிலுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக அங்கு உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அதைத்தொடர்ந்து, அதிரடியாக ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அதிபர் சிறிசேனாவின் எதிரியான  முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார்.

ராஜபக்சேவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்

இது இலங்கையில் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், அரசியல் சட்டப்படி தன்னை நீக்க முடியாது என்று கூறிய ரணில், நானே பிரதமர் என்று கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற சபாநாயகரும் குரல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து  வரும் 16ந்தேதி வரை இலங்கை நாடாளுமன்றத்தை  அதிபர் சிறிசேனா முடக்கி உள்ளார். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டி ராஜபக்சே பெரும்பான்மை நிரூபிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து, நடவடிக்கை எடுத்துள்ளார்.  வரும் 5ந்தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட வாய்ப்பு இருப்பதாக   ராஜபக்சே கூறியிருந்த நிலையில்,  நவம்பர் 7ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அதிபர் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் கூறி உள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

ரணில் மற்றும் ராஜபக்சே ஆகிய இருவருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிப்பது அராஜகம் வெற்றி ஈட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே இருந்த இலங்கை நாடாளுமன்றத்தில், ரணிலுக்கு அதிக அளவிலான எம்.பி.க்கள்  ஆதரவு நிலவி வந்த நிலையில், அவரது ஆதரவாளர்களை இழுக்க அங்கு குதிரை பேரம் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் வெற்றி பெறும் நோக்கில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற ரணில் விக்ரமசிங்கேயும், ராஜபக்சேவும் முயன்று வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ராஜ பக்சேவை நேரில் சந்தித்தும் பேசினார்.

இந்த  நிலையில், நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் கலந்துகொண்ட கூட்டத்தல், ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில்,  நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மை நிருபிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  மந்திரிப்பதவிகளையும் பணத்தையும் லஞ்சமாக கொடுத்து  முறைகேடாக இழுத்தெடுக்கும், த ஜனநாயக விரோத செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு தனது எதிர்ப்பையும் தெரிவித்துகொள்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மேலும், ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டது, அரசியலமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமான தும் என்றும்,  மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில் ´நடுநிலை´ வகிப்பதென்பது அராஜகம். வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக் கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு.”

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 15 எம்.பிக்களே யார் பிரதமர் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நிலையில், அவர்களை விலைபேசி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.