பரபரப்பான சூழ்நிலையில் 5ந்தேதி கூடுகிறது இலங்கை பாராளுமன்றம்

கொழும்பு:

லங்கையில் நடைபெற்று வருமை உள்நாட்டு குழப்பம் காரணமாக பாராளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பாராளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று உலக நாடுகள் வற்புறுத்தி வந்த நிலையில் வரும் 5ந்தேதி (திங்கட்கிழமை) இலங்கை பாராளு மன்றம் கூட இருப்பதாக தற்போதைய பிரதமர்  மகிந்த ராஜபக்சே அறிவித்து உள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 16ந்தேதி வரை முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ள நிலையில், தற்போது 5ந்தேதியே கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பம் காரணமாக, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவை டிஸ்மிஸ் செய்துவிட்டு, முன்னாள் அதிபரான ராஜபக்சேவை பிரதமராக  அதிபர் மைத்திரி சிறிசேனா நியமனம் செய்தார். இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.‘

நானே பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்கே அறிவித்து உள்ளார். அரசியல் சட்டப்படி தன்னை நீக்க முடியாது என்று கூறி உள்ளார். அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற சபாநாயகரும் குரல் கொடுத்துள்ளார். இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தையும் முடக்கி உள்ளார் அதிபர் சிறிசேனா.

இந்த நிலையில், புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட  ராஜபக்சே தலைமையிலான அமைச் சரவை கடந்த வாரம் பதவி ஏற்றது. ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர் களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைப்பெற்ற இச்சந்திப்பில், புதிய பிரதமர் நியமனத்திற்கு காரணமாக அமைந்த முந்தைய அரசாங்க பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாகவும்,  நாட்டின் அரசியல் அமைப்பிற்கேற்ப தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு தான் புதிய பிரதமரை தான் நியமித்துள்ளதாகவும், புதிய அரசாங்கம் என்றவகையில் அணிசேரா கொள்கைக் கேற்ப அனைத்து நாடுகளுடனும் இருந்துவரும் உறவுகளை பலப்படுத்தி முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று  ஜனாதிபதி மைத்ரிபால வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது.

ஏற்கனவே முன்னாள் பிரதமர் ரணிலுக்கு அதிக ஆதரவு நிலவி வந்த நிலையில், அவரது ஆதரவாளர்களை இழுக்க அங்கு குதிரை பேரம் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், வரும் 5ந்தேதி நாடாளுமன்றம் கூடப்படுவதாகவும், அன்று ராஜபக்சே மெஜாரிட்டி நிரூபிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.