சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்க ரஜினி டார்ஜிலிங் பயணம்: படக்குழுவினருடன் உற்சாகம்

டார்ஜிலிங்:

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த், இன்று காலா படம் வெளியானதை தொடர்ந்து, புதிய படத்தில் நடிப்பதற்காக டார்ஜிலிங் சென்றார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில்,அவர் ஷங்கர் இயக்கத்தில்  நடித்துள்ள  2.0 படம் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஏற்கனவே ஒப்பந்மான சன்பிக்சர்ஸ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி டார்ஜிலிங் சென்றார். அப்போது விமானத்தில் விமான ஊழியர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

டார்ஜிலிங்கில் புதிய படத்தின் தயாரிப்பு நிர்வாகி மற்றும் இயக்குனர் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்தில் விஜய் சேதுபதியும்  நடிக்கிறார். மேலும், ரஜினிகாந்த் வயது குறைந்தவராக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலா படம் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடுவதை அறிந்த ரஜினிகாந்த் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி