கால்நடைகளுக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ்: சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

சென்னை:

கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தமிழகசட்டப்பேரவையில்  அமைச்சர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், தனது தொகுதிக்குட்பட்ட காரியாண்டில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக  கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அரசின் கொள்கை முடிவிற்கு கட்டுப்பட்டு காரியாண்டியில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும்,, கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல புதிய ஆம்புலன்ஸ் வசதி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.