ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி குழந்தை அன்வியுடன் ஒரு ஃபோட்டோஷூட்….!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் திரையுலக பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் – ஏ.ஆர்.ரெய்கானா-வின் மகன் ஆவார். இவரின் தாய் ரெய்கானா அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஆவார். இசை குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டு இசை பயின்று வந்துள்ளார்.

இவரது மனைவி சைந்தவி பின்னணி பாடகியாக இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது .

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி ஜோடிக்கு கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Pic Courtesy : Ananda Vikadan

இந்நிலையில் மூன்று மாதம் கடந்து குழந்தையுடன் இந்த ஜோடி பிரத்யேகமாக விகடனுக்கு ஃபோட்டோஷூட் கொடுத்துள்ளது .