கேப்டன் கோலி –  நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் நடக்கும் மாளிகையின் பிரத்யேக போட்டோஸ்..

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் ஒன்றாக நடித்தனர். அந்த சந்திப்பின் மூலம் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். நாளடில் நட்பு காதலானது.

இதைத் விராத் கோலி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளராக கலந்துகொள்ள ஆரம்பித்தார்.

ஆனாலும் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த விசயம் வெளியானது.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் இத்தாலியில் உள்ள ஒரு ஆடம்பர மாளிகையில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக  தகவல் வெளியானது. தங்களது காதல் மற்றும் திருமணத்தைப்போலவே, திருமணம் நடைபெறும் மாளிகை குறித்த தகவல்கலையும் ரகசியமாகவே வைத்திருக்கிறது கோலி – அனுஷ்கா ஜோடி.

இந்த நிலையில்  அந்த மாளிகையின் படங்கள் தற்போது கிடைத்துள்ளன.

இத்தாலியில் உள்ள துஸ்கனி என்ற பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர மாளிகை விடுதியில் அவர்கள் திருமணம் நடைபெற மாளிகையின் படங்கள் இவை..