அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேற தடை…. டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் மற்ற நாட்டினர் குடியேற தடை விதிக்க இருப்பதாக அதிபர் டிரம்ப் டிவிட் பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக வல்லரசான அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி தள்ளாட்டம் போட்டு வருகிறது. அங்கு நாளுக்கு நாள்  பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை  7,92, 913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,517 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாட்டவர்கள்  அமெரிக்காவில் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளில் கடுமையான பொருளாதார சரிவை உருவாகி வருகிறது.  இந்த நிலையில்,
அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருதி, இந்த அதிரடி நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்,   கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்க குடிமகன்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டிய அவசியம் காரணமாகவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன்.

இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.