சென்னை:
ள்ளி – கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கல் விநிறுவனங்கள் அனைத்தும் கடநத 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலை வரி, மோட்டார் வாகன வரி செலுத்தும்படி அரசு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. இதை எதிர்த்து,  அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,  தனியார் பள்ளி – கல்லூரிகள் இயக்கும் வாகனங்களுக்கான ஓட்டுனர் மற்றும் கிளீனர் உள்ளிட்டோருக்கு ஊரடங்கு காலத்திலும் ஊதியம் வழங்கப்படுவதாக வும், ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரி வாகனங்கள் இயக்கப்படாத நிலையில், வாகனங்களுக் கான மோட்டார் வாகன வரி உள்ளிட்ட வரிகளில், வரி விலக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்து.
இதுபோன்ற வரி விலக்கு இமாலாச்சல பிரதேச அரசு, கல்வி நிறுவன வாகனங்களுக்கு அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, மனு தொடர்பாக தமிழகஅரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.