Random image

ஓமியோபதி மருத்துவம் படித்தவர்கள் மருத்துவராக பணிபுரிய ‘எக்சிட் தேர்வு’ கட்டாயம்! புதிய மசோதாவில் தகவல்

டில்லி:

மியோபதி மருத்துவம் படித்தவர்கள் மருத்துவராக பணி புரிய வேண்டுமென்றால் எக்சிட் தேர்வு எழுத வேண்டும் என்றும், ஓமியோபதி படிப்புக்கும்  நீட் தேர்வு எழுத வேண்டும் என்றும் புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று நடைபெற்ற மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் பல  திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆணையம், தேசிய ஹோமியோபதி ஆணையம்  மசோதாக்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி மத்திய ஓமியோபதி ஆணையத்தை கலைத்துவிட்டு தேசிய ஓமியோபதி ஆணையம் அமைக்கப்படுகிறது.

மேல்நிலைக் கல்வியை முடித்தவர்கள் ஓமியோபதி மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், அதற்கான நீட் போன்ற தேசிய பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், தேர்ச்சி பெற்றால் மட்டுமே மற்ற மருத்துவம் போல ஓமியோபதியும் படிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, ஓமியோபதி மருத்துவம் படித்தவர்கள், மருத்துவராக பணிபுரிய வேண்டும் என்றால் அற்கான எக்சிட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் வகையில்,  புதிய விதிமுறைகளை இந்த ஆணையம் வகுக்கும் என்றும் அறிவித்து உள்ளது.

(மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் மீண்டும் ஒரு தேர்வில் தேறினால் மட்டுமே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்து மருத்துவராக பணிசெய்ய முடியும்)

மேலும், ஹோமியோபதி மருத்துவத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்பதற்காக தேசிய ஹோமியோபதி ஆணையம் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலை யில், இந்த  புதிய ஆணையத்தில் தன்னாட்சி நிறுவனங்கள் இடம்பெறும். இதன் மூலம் தன்னாட்சி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, தரத்தை உயர்த்துவது, மதிப்பிடுவது என்பதையும் இந்த ஆணையமே முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்து  எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஏற்கனவே  எக்சிட் தேர்வு மற்றும் தேசிய மருத்து ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் மருத்துவ மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.