லாகூர்:

பாகிஸ்தான் லாகூரில் சுமார் 30 ஆயிரம் 3ம் பாலினத்தவர்கள் உள்ளனர். இவர்கள் பயன்பெறும் வகையில் அங்கு முதல் முறையாக 3ம் பாலினத்தவர்களுக்கு பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

லாகூர் ராணுவ குடியிருப்பில் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 40 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். இங்கு படிக்க வயது வரம்பு கிடையாது. சமையல், பேஷன் டிசைனிங் உள்ளிட்ட 8 துறைகள் உள்ளன. இங்கு 3ம் பாலினத்தவர்கள் உள்பட 15 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.