சென்னை:

ரியலூரில் விரிவாக்கம் செய்யப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையை இன்று சென்னை  தலைமைச் செயலகத்தில்இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.

இந்த சிமெண்ட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதன்  மூலம் நேரடியாக 250 பேரும், மறைமுகமாக 1000 பேரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று அரசு தெரிவித்து உள்ளது. மேலும், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேபோல மணப்பாறை மொண்டிபட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன விரிவாக்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் காகித நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதுதவிர, ரூ.1,100 கோடியில் நாள்தோறும் 400 மெட்ரிக் டன் மரக்கூழ் உற்பத்தி செய்யும் பிரிவுக்கு அடிக்கல் நாட்டினார்.

மதுரை உலக தமிழ்சங்க வளாகத்தின் முதலாவது தளத்தில்  கீழடி ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் கண்காட்சி மையம் திறக்கப்பட்டு உள்ளது.

அத்துடன்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்மா படப்பிடிப்பு தளத்துக்கு அடிக்கல் நாட்டல் மற்றும் சுற்றுலா, பண்பாடு, தொழில், தொல்லியல், நெடுஞ்சாலை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) மற்றும் அறநிலையத் துறை ஆகிய துறைகளுக்கு பல்வேறு திட்ட பணிகள் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட்டது.

பையனூரில் அமையவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. *அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அம்மா படப்பிடிப்பு தளம் 90 அடி நீளம், 160 அடி அகலம் கொண்டது.