சென்னையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை:

மிழகம் முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் போன்ற வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கர்நாடகாவிலும் மைசூர் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளி லும் மழை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.