சீன அரசியல்வாதிகளின் வருடாந்திர ரிசார்ட் சந்திப்பு – இந்தாண்டு எப்படி?

பெய்ஜிங்: சீன தலைநகர் பீஜிங்கிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள பெய்டே கடற்கரை ரிசார்ட்டில் நடைபெறும் வருடாந்திர அரசியல் சந்திப்பில் இந்தமுறை யார் யார் கலந்துகொள்ளவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம், பெய்டே ரிசார்ட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சந்திப்பது வழக்கம். இதன்மூலம், அவர்கள் தங்களுக்கு இடையிலான அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

ஆனால், இது கொரோனா காலகட்டமாக உள்ளதால், இந்தாண்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் எத்தனை ப‍ேர் கலந்துகொள்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சந்திப்பின் பொருட்டு, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தமுறை நடைபெறவுள்ள அரசியல் சந்திப்பில், தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் தற்போது மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தனது அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி