பெர்லின்: குளோரோக்யுன் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோக்யுன்(HCQ) ஆகிய மருந்துகள், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ, கொரோனோ எதிர்ப்பு சிகிச்சையில் போதியளவு பலனைக் கொடுக்கவில்லை என்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனைகளில், மனித மற்றும் குரங்கு நுரையீரல் செல்களில், எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை அந்த மருந்துகள் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட அந்த 2 மருந்துகளும், பொதுவாக மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய கொரோனா உலகில், வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்கு பெரியளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதன் முடிவுகளில்தான், அந்த மருந்துகள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.