சசிகலா புஷ்பா நாட்டை விட்டு வெளியேறினார்?

டில்லி:

ர்ச்சை எம்.பி. சசிகலாபுஷ்பா, நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, தொடர்ந்து எம்.பி. பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார். இதன் பிறகு, அவர் மீது மோசடி உட்பட பல புகார்கள் தமிழகத்தில் பதியப்பட்டன. இவரது கணவர் மற்றும் மகன் மீது பாலியல் புகாரும் பதிவானது.

sasi

இந்த நிலையில், “பொய்ப்புகார்களை எதிர்கொள்ள தயார். நான் நினைத்தால் அரசியலில் பெரும் மாற்றம் வரும்” என்று பேட்டியளித்தார் சசிகலா புஷ்பா. அதோடு. முன்ஜாமீன் வேண்டி, டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வரும் 22ம் தேதி வரை சசிகலா புஷ்பாவை கைது செய்யக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சசிகலாபுஷ்பா, வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் டில்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சசிகலா புஷ்பா, அவரது வீட்டில் இல்லை என்றும், எங்கு சென்றார் என்பது தெரிவில்லை என்றும் டில்லி காவல்துறை வட்டாரம், உள்துறை அமைச்சகத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாக  கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்ற யூகம் எழுந்திருக்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: admk, Expelled, india, left, mp, rs, Sasikala pushpa, இந்தியா, எம்.பி., சசிகலாபுஷ்பா
-=-