சென்னை

ருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அரசு கையேடு சொந்த மாநிலம் குறித்து அளித்துள்ள விளக்கம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தர வரிசைப்படி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.  நேற்று கலந்தாய்வில் கலந்துக் கொண்ட 1490 மாணவர்களில் 1379 பேருக்கு கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் நேற்று முன் தினம் இரு மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை நிரூபிக்க முடியாததால் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கான கையேட்டில் “தமிழ்நாட்டை தவிர வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டில் வசித்த போதிலும் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக கருதப் பட மாட்டார்கள..  அவர்கள் பொதுப் பிரிவில் வருவதாக கருதப்படுவார்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வரியில், “தமிழ்நாட்டை சொந்த மாநிலமாக கொள்ளாத வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் பொது பிரிவின் கீழ் வருவார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் வெளி மாநிலத்தில் கல்வி கற்றாலும் தமிழக ஒதுக்கீட்டின்படி இடம் கோரலாம் என பலரும் தவறுதலாக நினைத்து விடுகின்றனர்.  இது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் தர வரிசைபட்டியலில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் மேற்சொன்ன இரு விதிகளும் தனித்தனியாக அளிக்கப்பட்டது தான் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.    இந்த குழப்பத்தின் காரணமாக அரசு வெளியிட்டுள்ள தர வரிசைப் பட்டியலில் பல வெளி மாநில மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இதை சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் ராஜன் குறிப்பிட்டு அதிகாரிகள் மாணவர்களின்பெற்றோர்களின் சொந்த மாநிலம் குறித்து சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.  இதற்கு மாநில சுகாதர அமைச்சர் விஜய பாஸ்கர் நன்றியை தெரிவித்ததுடன் அதிகாரிகள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.