வதந்திகளுக்கு விளக்கம் கேட்காதீங்க என எஸ்பிபி சரண் காட்டம்….!

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர் மறைவுக்கு அணைத்து திரையுலகினர் , அரசியல் தலைவர்கள் , ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர் .

இந்நிலையில் அவரது மறைவிற்கு அஜித் வரவில்லை, ஏன் ஒரு அறிக்கை கூட விடவில்லை என சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டுவருகிறது .

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித் எனக்கு நல்ல நண்பர். அஜித் வர வேண்டிய அவசியம் இல்லை. அவர் எங்கிருந்து மரியாதை செலுத்தியிருந்தால் என்ன? அதுபற்றி பேச வேண்டியதில்லை. இதை ஒரு விஷயமாக பேசவேண்டிய அவசியம் இல்லை. அப்பா இல்லை. எங்களிடம் வதந்திகளுக்கு விளக்கம் கேட்காதீங்க- என எஸ்பிபி சரண் கூறியுள்ளார் .