காபூல்:

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா – தலிபான் இடையில் நடந்து வந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம், 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நான்கு விமானங்களை கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள், இரண்டு விமானங்களை உலக வர்த்தக மைய இரட்டை கோபுரத்தின் மீது மோதி பெரும் இழப்பை ஏற்படுத்தினர். அதன் 18வது ஆண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு  தலிபான் தீவிரவாதிகள் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் குண்டு  வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றும், தூதரகத்தின் காம்பவுண்டு வளாகத்தில் ராக்கெட் விழுந்து வெடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தூதரகம் அருகே நேட்டோ அலுவலகமும் உள்ளது. அங்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் தலிபான்களின் தாக்குதலில் நேட்டோ வீரர்கள் உள்பட பலர் பலியான நிலையில்,  தலிபானுடனான பேச்சுவார்த்தையை டிரம்ப் ரத்து செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று காபூல் அமெரிக்க தூதரகம்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.