காவல்கிணறு,

கேந்திரகிரி மலையில் அமைந்துள்ள விண்வெளி ஆராயச்சி நிலையம் அருகே உள்ள மலைப்பகுதி யில் குண்டு வெடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விண்வெளி ஆராயச்சி மையம் அமைந்திருக்கும் பகுதி அருகே மர்ம பொருள் வெடித்து புகை கிளம்பியதால், அது வெடிகுண்டாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி மலையில் திடீரென வெடிச் சத்தத்துடன் புகை வெளியேறியது. வெடிகுண்டு சம்பவம் நடந்த பகுதிக்கு அருகேதான்,  இந்திய விண்வெளி துறையின் முக்கிய பிரிவான திரவ இயக்க உந்தும மையம் செயல்படுகிறது.

இந்த மையத்தின் மூலம் தயாராகும் பொருட்கள் அனைத்தும் இஸ்ரோவுக்கு அனுப்பபட்டு அங்கு ராக்கெட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விண்வெளி மையம் முழுவதும் மத்திய அரசின் தொழிற்பாதுகாப்பு படை பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனிடையே, இப்பகுதியில் மர்ம விமானங்கள் பறப்பதாக ஏற்கனவே அந்த பகுதி மக்கள் புகார் கூறியிருந்த நிலையில், நேற்று அந்த  மலைப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது. அதன் காரணமாக புகை வெளியேறியது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடடினயாக விண்வெளி நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த பகுதியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது பாறை வெடிப்பா அல்லது ஏதேனும் மர்ம பொருள் அல்லது குண்டு வீச்சு காரணமாக ஏற்பட்ட பாதிப்பா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.