மெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில்  ஒரு குப்பை தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக நியூ ஜெர்சியில் இருக்கும் இருக்கும் ஆப்கானை சேர்ந்த அகமத் கான் ரஹாமி என்ற 28 வயது வாலிபரை போலீஸ் தேடி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் 29 பேர் காயமடைந்தது நினைவிருக்கலாம். அதை தொடர்ந்து நியூ ஜெர்சியில் உள்ள எலிசபெத் இரயில் நிலையத்தில் ஒரு குப்பை தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டு செயலிழக்க செய்யும்போது வெடித்தது. ஆனால் அதிருஷ்டவசமாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
1new-jersey11
இதன் விளைவாக சில மணி நேரங்கள் இரயில் போக்குவரத்து தடைப்பட்டது எனவும், மேலும் சில குண்டுவெடிப்புகள் நிகழக்கூடும் என்பதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன எனவும் அந்நகர மேயர் கிறிஸ்டியன் பவுலேஜ் தெரிவித்தார்.
நியூயார்க், நியூ ஜெர்ஸி இரு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளும் ஒன்று போல இருப்பதால் இரண்டிலும் ஒரே அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. நியூயார்க் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டுவரும் அமெரிக்க குடியுரிமை பெற்ற ஆப்கானியரான அகமத் கான் ரஹாமி சிக்கினால் இது தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,