சென்னை: தமிழக்ததில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து, விரைவு பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் மற்றும்  சிறப்பு ரயில் சேவை தொடக்கி உள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு பொதுப்போக்குவரத்து தொடங்கி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து 5வது கட்ட தளர்வாக பொதுப் போக்குவரத்துக்கும் தமிழக அரசு பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்து, சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில், பொதுப்போக்குவரத்து, மாவட்டங்களுக்கு இடையே இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்படு கின்றன.
முன்னதாக தமிழகஅரசிஉ த்தரவைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை  பேருந்துகள் கிருமி நாசினி மூலம்  சுத்தப்படுத்தும்பணி நடைபெற்றது.  பேட்டரி செக்கப்,  எரிபொருள் சோதனை, வாகனத்தின் கண்டிசன் உள்பட அனைத்து சரி செய்யப்பட்டு, இன்று பேருந்துகள் இயங்க தயாா் நிலையில் உள்ளன.

பேருந்து பயணத்தன்போத  முகக் கவசம் கட்டாயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாகப் பயன்படுத்துதல், பணியாளா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்டவற்றைப் பின்பற்றி, பேருந்துகள் இயக்கப்படும்.

வெளியூா் பேருந்துகளில் 32 பயணிகள், நகரப் பேருந்துகளில் 24 பயணிகள், விரைவுப் பேருந்து களில் 26 பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவா். வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது.

 விரைவுப் பேருந்துகளைப் பொருத்தவரை, சென்னையில் இருந்து பிற ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் சோ்த்து, சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், பயணக் கட்டணத்தில் எந்தவித மாற்றமுமில்லை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தொல தூர பேருந்தில் பயணிப்பதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முன்பதிவு செய்து உள்ளனா்.

அதுபோல சென்னையில்,  சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் இன்று தொடங்கி உள்ளது.  காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று குறிப்பிட்ட வழிகளில் மட்டுமே ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும் செப்டம்பர் 9ந்தேதி முதல்  சென்னை விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமையும், பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை  தொடங்குகின்றன.

ரயில் பயணத்தின்போதும், நடைமேடையில் காத்திருக்கும்போதும் பயணிகள் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ற்போது 5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் நிலையில், பயணிகள் தேவைக்கு ஏற்ப இந்த ரயில்களின் எண்ணிக்கை உயா்த்தப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதுபோல இன்று முதல்  சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி வரையிலும் அதேபோல் கோவையில் இருந்து மயிலாடுதுறை வரையிலும் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மேலும் 4 சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையில் இருந்து எழும்பூர் வரைக்கும், எழும்பூர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் மற்றும் கன்னியாகுமரி முதல் எழும்பூர் வரைக்கும், சென்னை எம்ஜிஆர்(சென்ட்ரல்) முதல் மேட்டுப்பாளையம் வரைக்கும் மேட்டுப்பாளையம் முதல் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் வரைக்கும் அதேபோல் திருச்சி- நாகர்கோவில் முதல் நாகர்கோவில்- திருச்சி வரைக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது.