Random image

எக்ஸ்பிரஸ் ரயில்களில் காம்போ உணவுகள் வழங்க முடிவு

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் சோலா பதுரா, ராஜ்மா சாவல், இட்லி சாம்பார் உள்ளிட்ட உணவு வகைகளை பயணிகளுக்கு அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. இந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிகளில் காம்போ உணவுகளை அறிமுகப்படுத்த உள்ளது. ராஜஸ்தானி மற்றும் துரண்டோ எக்ஸ்பிரஸ் ரயில்களில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ரயில்களில் வழங்கப்படும் உணவுகளில் மாற்றம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. முதல்முறையாக 10 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் காம்போ உணவுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

combo

ரயில்வே வாரியம் உணவு முறையில் மாற்றம் செய்யப்படுவதற்கு அங்கீகாரம் அளித்து விட்டால் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதலில் ரயில்களில் சோலா பதுரா, ராஜ்மா சாவல் வகையை சேர்ந்த உணவுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய ரயில்வேத்துறையின் கேட்டரிங் கழகம் வெளிநாட்டு ஏஜென்சி மூலம் ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து இரண்டு கணக்கெடுப்புகளை நடத்தியது. இந்த கணக்கெடுப்புகள் ராஜ்தானி, துரண்டோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் எடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் படி அதிகப்படியான பயணிகள் காம்போ உணவுகளை பரிந்துரைத்தது தெரிய வந்தது. ராஜ்மா சாவல், சோலா பதுரா, இட்லி சாம்பார் உள்ளிட்ட உணவுகளை வழங்குமாறு அதிகளவிலான பயணிகள் கேட்டுக் கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் உணவுகளை வழங்க இந்திய ரயில்வேத்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி கவுஹாதி சதாப்தி எக்ஸ்பிரஸ், திப்ருகர் கவுஹாத்தி சதாப்தி எக்ஸ்பிரஸ், நாகர்லாகன் கவுஹாதி சதாப்தி எக்ஸ்பிரஸ், கவுஹாத்தி நாகர்லாகன் சதாப்தி எக்ஸ்பிரஸ், புனே செகந்தரபாத் சதாப்தி எக்ஸ்பிரஸ், செகந்த்ரபாத் புனே சதாப்தி எக்ஸ்பிரஸ், ஹவுரா பூரி சாதப்தி எக்ஸ்பிரஸ், சென்னை செண்ட்ரல் பெங்களூரு சிட்டி சதாப்தி, பெங்களூரு சிட்டி சென்னை சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் முதற்கட்டமாக காம்போ உணவுகளை வழங்கப்பட உள்ளன.

பயணிகளின் விருப்புத்திற்கு ஏற்றார் போல் பயணிக்கவும், அவர்களிடம் நட்பு ரீதியான உறவை கடைப்பிடிக்கும் பொருட்டு ரயில்வேத்துறை இத்தகைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.