வேலூரில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

வேலூர்:
வேலூரில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலூரில் இன்று முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 70 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.