ஜெயலலிதா மரணம்..  விசாரணை ஆணையத்தின் தலைவிதி?

ஜெயலலிதா மரணம்..  விசாரணை ஆணையத்தின் தலைவிதி?

முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான சூழ்நிலையை  விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தைத் தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி அமைத்தது.

அமைச்சர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

இந்த ஆணையத்தின் பதவிக்காலம் இதுவரை 7 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கினால், இந்த ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் நடப்பு பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிகிறது.

விசாரணை முடியாததால், பதவிக்காலத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

8வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா?

முதல் –அமைச்சருக்கே தெரியும்.

– பா.பாரதி