சென்னை: தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொரில் பல்வேறு மசோதாக்கள்  தாக்கல் செய்யப் பட்டு வருகிறது.  காலை கேள்வி நேரம் முடிந்ததும், புதிய கல்விக்கொள்கை, கிஸான் திட்ட முறைகேடு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, துணைமுதல்வர் துணை பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.திருமண பதிவு மாற்றம், அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாக பிரிப்பு, போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை உள்ளிட்ட மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.

அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீடிக்கும் மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மூலமாக, தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2020 டிசம்பர் வரை நீடிக்கப்பட உள்ளது.