சென்னை:

சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய கால அவகாசம் பிப்ரவரி 15ந்தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  ஜனவரி 20ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் மிக குறைந்த அளவிலான  பெண்கள் விடுதிகள் மட்டுமே பதிவு செய்திருந்தது. அதைத்தொடர்ந்து, பதிவு செய்வதற்கான கால அவகாசம் மேலும்  25 நாட்கள் நீட்டித்து, பிப்ரவரி 15ந்தேதி அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வேலைக்கு செல்லும் இளம்பெண்களை குறிவைத்து ஏராளமான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல விடுதிகளில் மறைமுகமாக காமிரா போன்ற எல்க்ட்ரானிக் உபகரங்கள் மூலம்  பெண்களின் நடவடிக்கைகள் படம் பிடிக்கப்பட்டது சமீபத்தில் தெரிய வந்தது. அதுபோல பல விடுதிகளில் தங்கியுள்ள பெண் களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஏற்பான புகார்கள் வந்துள்ளன,. இதையடுத்து, பெண்கள் விடுதிகளை ஒழுங்கு படுத்தும் நோக்கில், சென்னையில் செயல்பட்டு வரும் விடுதிகள் குறித்து உடனே அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதுகுறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

விடுதி நடத்துப வர்கள் அரசின் சமூக நலத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்று  புதிய வழி காட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி விடுதி நடத்துபவர்கள், பதிவு செய்ய முதல்கட்டமாக கடந்த 2018ம் ஆண்டு   டிசம்பர் 31ந்தேதி அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் அவரை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 20ந்தேதி  வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 3வது முறையாக கால அவகாசம்  மேலும் 25 நாட்கள் நீடித்து, பிப்ரவரி 15ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 2000 பெண்கள் விடுதிகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், 524 விடுதிகள் மட்டுமே இதுவரை  பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.