இத்தாலி பிரதமருடன் சுஷ்மா சந்திப்பு

ரோம்:

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 7 நாள் பயணத்தின் முதல் நாளான இன்று இத்தாலி சென்றடைந்தார். அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்தும், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக இத்தாலியின் புதியதாக பிரதமராக பொறுப்பேற்ற கியூசெப்பி கான்ட்டேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ஸோ மோவேரோ மிலான்சேயை சந்தித்து பிராந்தியம் மற்றும் உலக அரசியல் பிரச்சனைகள் குறித்து பேசினார்.