ஐரோப்பாவில் சுஷ்மா 7 நாள் சுற்றுப் பயணம்

டில்லி:

ஐரோப்பா நாடுகளுக்கு 7 நாள் சுற்றுப் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

வரும் 23-ம் தேதி வரை இத்தாலி, ஃபிரான்ஸ், லக்ஷம்பர்க், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இத்தாலியின் பிரதமராக பதவி ஏற்றுள்ள ஜியூஸெ பி கான்ட்-ஐ சந்தித்து பேசுகிறார். 18-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார்,

அங்கு 2 நாட்கள் தங்கும் அவர் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து பிரான்சில் இந்தியா&-பிரான்ஸ் 20-வது ஆண்டு விழாவில் கலந்தகொள்கிறார். 20- முதல் 23-ம் தேதி வரை பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரசல்ஸ் துணை பிரதமரையும், ஐரோப்பிய ஆணைய தலைவரையும் சந்தித்து பேசுகிறார். லக்ஷம்பர்க் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் என்ற பெருமையை சுஷ்மா சுவராஜ் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.