சிறப்பு ரயில்களில் பயணிப்பவருக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணம்: இந்திய ரயில்வே அறிவிப்பு

டெல்லி: சிறப்பு ரயில்களில் பயணிப்பவருக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிக்கு ₹ 50 கூடுதல் கட்டணம் வசூலிக்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து வருவதற்கு தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றாலும், நாட்டில் இயக்கப்படவுள்ள அனைத்து சிறப்பு ரயில்களிலும் கூடுதல் கட்டணங்கள் பொருந்தும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

படுக்கை வசதி கட்டணத்திற்கு கூடுதலாக ஒரு பயணிக்கு 50 ரூபாய்  வசூலிக்க தெற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு ரயில்வே பகுதிகளுக்கு ரயில்வே வாரியம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணங்கள் விரைவு கட்டணம் என்ற வகையில் ரூபாய் 30ம், கூடுதல் கட்டணம் ரூ. 20ம் உள்ளடக்கியது ஆகும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென் மத்திய ரயில்வே இயக்கப்படும் சிறப்பு ரயிலை போலவே, தெற்கு ரயில்வேயானது கொச்சியில் இருந்து புவனேஸ்வர் வரை சிறப்பு ரயிலை இயக்குகிறது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.