தமிழகத்தில் அசாதாரண சூழல்: நடவடிக்கை தேவை! ஸ்டாலின்

சென்னை,

மிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் அதிரடி பேட்டி காரணமாக தமிழக அரசியல் கலகலத்து போய் உள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு  பிரிவினரும், பன்னீருக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல்தலைவரும்,  தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கூறியதாவது,

முதல்வரின் பேட்டி மூலமாக அவரை சசிகலா செயல்பட விடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இதைத்தான் திமுக சார்பில் தொடர்ந்து கூறினோம்.  தமிழகத்திலுள்ள எல்லா தரப்பு மக்களுமே, அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும் இதைத்தான் சொன்னார்கள்.

இது தற்போதைய ஓபிஎஸ் பேட்டிமூலம் நிரருபணம் ஆகி உள்ளது.

ஒரு மாநில முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியுள்ளனர். மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கே இந்த கதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசாங்கம் என்பதே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைய ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாநில முதல்வரை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கி ஆளுநரிடம் வழங்கியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில்  ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இன்னும் என்னென்ன மர்மங்கள் வெளிவரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கூட மர்மமாக உள்ளது. அவர் ஏன் மரணமடைந்தார் என்பதும் மர்மமாக உள்ளது.

ஓ.பி.எஸ் கூறியதை வைத்து பார்த்தால் மர்மங்கள் மிக அதிகமாக உள்ளது.

முதல்வரின் செயலாளர்கள் திடீரென ராஜினாமா செய்வதும் மர்மமாக உள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.