காஷ்மீரில் கடும் குளிர்: சுற்றுலாத்தலமான தால் ஏரி உறைந்தது

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக,  ஸ்ரீநகரில் உள்ள பிரபலமான தால் ஏரி பனிக்கட்டியாக உறைந்து உள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான காஷ்மீர் தால் ஏறி தற்போது அங்கு நிலவி வரும் கடும் பனி மற்றும் குளிர் காரணமாக உறைந்து காணப்படுகிறது.  சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் தால் ஏரியின் படகு சவாரி பிரபலமானது.

இவ்வளவு பிரசித்தி பெற்ற தால் ஏரியின் கரையோரப் பகுதி கடுமையான குளிர் காரணமாக  உறைந்து விட்டது.  ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரியாக குறைந்து விட்டது. எனவே தால் ஏரி மட்டுமல்லாமல், பிற நீர் நிலைகளும் உறைந்து போய் உள்ளன. குழாய்த்தண்ணீரும் உறைந்து போய் உள்ளது.  இதைக் காணும் ஏரியின் மீது ஏறி மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து வருகின்றனர்.

இதுகுறித்து காஷ்மீர் மாநில அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,  காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் குழந்தைகளும், மூத்த குடிமக்களும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.