ஒடிசா:

டிசா மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டு இதுபோன்றே பைலின் புயல் கரையை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்ற நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவான ஃபானி புயலும் ஒடிசாவில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக ஒடிசாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர். இருந்தாலும் ஒடிசா மக்கள்  பீதியுடனேயே இருந்து வருகின்றனர்.

இலங்கை அருகே தென் கிழக்கு வங்க கடலில் உருவான ஃபோனி புயல், திசை மாறி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. அதி தீவிர புயலாக மாறியுள்ள ஃபோனி புயல் சென்னையில் இருந்து வங்க கடலில் 690 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மே 3-ஆம் தேதி ஒடிசாவில் கோபால் பூருக்கும், சந்தபாலிக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஃபோனி புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒடிசாவின் 5 மாவட்டங்களில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தீவிர புயலாக உருவெடுத்துள்ள ஃபானி புயல் காரணமாக மேற்கு வங்கம், ஆந்திரா, கேரளா கடற்கரை பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ற்கனவே கடந்த 2013ம் ஆண்டு இதே இடத்தில் தான் பைலின் புயல் கரையை கடந்தது. அப்போது புயலின் காரணமாக200 கி.மீ., காற்று வீசியது. இதனால் பல மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடீசாவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய இப்புயல் தொலைத்தொடர்பு கட்டமைப்பை முற்றிலும் உருகுலைத்தது குறிப்பிடத்தக்கது.