சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா (ஓபிஎஸ் அணி) அணியினரின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அணி சார்பாக அதிமுகவின் மூத்த தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் பகுதிக்கான தேர்தல் அறிக்கையை,  முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து முன்னாள் கல்வி அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன், தேர்தல் அறிக்கையை குறித்து விவரித்தார்.

அப்போது, வடசென்னையில் சுகாதார கேடுகளை விளைவித்து வரும் கொடுங்கையூர் குப்பை மேடு அமைந்துள்ள எழில் நகர் பகுதி சுற்றுலா மையமாக மாற்றப்படும் என்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த  தேர்தல் அறிக்கையில் 108 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

எழில்நகர் (கொடுங்கையூர்) குப்பை மேடு

முக்கிய அம்சங்கள்:

இளைஞர்களுக்கு தொழிற்பயிற்றி அமைக்கப்படும்

அரசு கல்லூரி உலகத் தரத்திற்கு மாற்றப்படும்

பெண்களை தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கை

ஆர்.கே.நகர் தொகுதியில் மேலும் 2 உயர்நிலைப் பள்ளிகள், 1 மேல்நிலைப் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுத்துறை வங்கிகள், நூலக வசதி ஏற்படுத்தப்படும்

இந்தியாவிலேயே முதன் முறையாக நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும்

எழில்நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும்

முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை

 

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை

 

அனைவருக்கும் பட்டா, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் தரப்படும்

அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு பயிற்சி தந்து வேலை கிடைக்க ஏற்பாடு

இதுபோன்ற 108 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.