காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 கணக்குகள் முடக்கிய முகநூல்

டில்லி

முகநூல் நிர்வாகம் காங்கிரஸ் கட்சிக்கு தொட்ர்புடைய 687 கணக்குகளை முடக்கி உள்ளது.

மக்களிடையே தற்போது மிகவும் பிரபலமான சமூக வலைத் தளங்களில் முகநூலும் ஒன்றாகும்.    இந்த முகநூலில் இருந்து பயனாளர்கள் கணக்குகளின் விவரங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியானது சர்ச்சையை உண்டாக்கியது.   அப்போது முதல் முகநூல் நிர்வாகம் அனைத்து கணக்குகளையும் கண்காணித்து வருகிறது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் முகநூல் நிர்வாகம் தனது கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது.    அந்த கண்காணிப்பில் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 கணக்குகளை முகநூல் நிர்வாகம் முடக்கி உள்ளது.

இது குறித்து முகநூல் நிர்வாகம் ”தங்கள் அடையாளங்களை மறைத்து வேறு ஒருவர் பெயரில் 687 கணக்குகள் தொடரப்பட்டுள்ளன.   இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான செய்திகளையும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான செய்திகளைய்ம் வெளியிடு வந்தன.  ஆகவே இவை முடக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மேல் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களை செய்யும் பிற கட்சியினர் முகநூல் கணக்குகள் முடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.