உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் திடீர் முடக்கம்.. ! பயனாளர்கள் கடும் அவதி

டெல்லி: உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலை தளங்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதன் பயன்பாட்டாளர்கள் மிக அதிகம்.

ஆனால் இரவு 8 மணியளவில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது. பேஸ்புக் மெசஞ்சரும் வேலை செய்யவில்லை. 1 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியதால் பயனாளர்கள் தவித்து போயினர்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதே போன்று  பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் ஒட்டுமொத்தமாக முடங்கின. அதன்பிறகு இப்போது தான் அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Facebook block, Instagram, WhatsApp users..., இன்ஸ்டாகிராம், பேஸ்புக் முடக்கம், வாட்ஸ் அப் பயனாளர்கள்
-=-