சேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…

சான்பிரான்சிஸ்கோ:

பேஸ்புக் வாடிக்கையாளர் சேவை தளமான கஸ்டமரை (Kustomer) ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

வாடிக்கையாளர் சேவை தளங்கள் மற்றும் சாட்போர்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த கஸ்டமர் என்னும் செயலியை பேஸ்புக் ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் நேற்று கஸ்டமர் செயலியை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதனுடன் தொடரலாம் என்று தெரிவித்துள்ளது. கஸ்டமர் செயலி கடைசியாக நடந்த தனியார் நிதி சுற்றில் 710 மில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது.

பாதுகாப்பான பேஸ்புக் கட்டமைப்பில் கஸ்டமர் தரவை இணைக்கப் போவதாக விளம்பரங்கள் மற்றும் வணிகத் தயாரிப்புகளின் தலைவரான டான் லெவி தெரிவித்துள்ளார், மேலும் அவ்வாறு செய்யும்போது, வணிக வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தலின் பேரில் பேஸ்புக் ஒரு சேவை வழங்குனராக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர் ஒருவர் பார்க்கும் விளம்பரங்களை தெரிவிக்க பேஸ்புக் தானாகவே கஸ்டமர் தரவை பயன்படுத்தாது என்றாலும், வணிகங்கள் தங்கள் தரவை தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த நேரலாம் அதற்காக ஃபேஸ்புக்கில் தனி விளம்பரச் சேவைகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கஸ்டமர் செயலி பல்வேறு சேனல்களிலிருந்து வாடிக்கையாளர்களின் உரையாடல்களை ஒரே திரை பார்வைக்கு கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.