ஃபேஸ்புக் நிறுவனம் தனது பக் பவுண்டி திட்டத்தின் 5 ஆவது ஆண்டுவிழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. பக் பவுண்டி என்பது ஒரு இணையதளத்தில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டுபிடித்து யார் வேண்டுமானாலும் அந்த நிறுவனத்திடம் அறிவிக்கலாம். அந்த குறைபாடு உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் தவறை கண்டறிந்து சொன்ன அந்த நபருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பரிசளிக்கும்.

bug_bounty

இந்த பக் பவுண்டி திட்டத்தை ஃபேஸ்புக் மட்டுமன்றி மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களும் நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் ஃபேஸ்புக்கில் உள்ள குறைபாடுகளை சுட்க்காட்டி இந்தியர்கள் மட்டும் ரூ.4.8 கோடி பரிசு பெற்றுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
இவ்வாண்டு ஃபேஸ்புக்குடன் வாட்ஸாப்பும் சேர்ந்துள்ள நிலையில் பிட்காயின் முறை மூலம் பக் பவுண்டி ஆய்வாளர்களுக்கு இன்னும் எளிதாக சன்மானப் பணம் கிடைக்க வழிவகை செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் சுமார் 9,000 குறைகளை பக் பவுண்ட்டி ஆய்வாளர்கள் கண்டறிந்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளனர். அதற்காக இந்நிறுவனம் சுமார் 611,741 அமெரிக்க டாலர்களை 149 ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 5 மில்லியன் டாலர்களை 900 ஆய்வாளார்களுக்கு வழங்கியுள்ளது. இதில் பெரும்பான்மையோர் இந்தியர்கள்.
இனி வரும் காலங்களில் இந்த திட்டத்தை இன்னும் விரிவு படுத்தப்போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.