நியூயார்க்

ற்கொலை எண்ணம் கொண்டோரை அதிலிருந்து மீட்க முகநூல் உதவ உள்ளது.

ஏ ஐ டூல் எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலியை முகநூல் அறிமுகப் படுத்தி உள்ளது. இதில் தற்கொலை எண்ணம் உள்ளவர்களை அதிலிருந்து வெளிக் கொணர சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து முகநூல் உரிமையாளரான மார்க் சுகர்பெர்க் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செயலி தற்கொலை எண்ணத்துடன் பதிவுகளைப் பதியும் முகநூல் உபயோகிப்பாளர்களைக் கண்டறியும்.  பின்பு முகநூல் குழுவினர் அந்தப் பதிவருடன் பேசி அவருக்கு கலந்தாலோசனை நடத்தி அவரை அந்த எண்ணத்தில் இருந்து மீட்கும்.  இந்த செயலி பதிவு மற்றும் அதற்கு வரும் பின்னூட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறாரா என்பது போன்றவற்றைக் கண்டறியும் படி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மார்க் தனது பதிவில், “இளைஞர்களின் இறப்புகளில் பெரும்பாலானவை தற்கொலையினால் ஏற்படுகின்றன.  நாங்கள் இதை தடுக்க ஏற்கனவே சில தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முயன்றுள்ளோம்;  அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.  இந்த உதவியை அனைத்து உபயோகிப்பாளர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் அனைத்து மொழிகளிலும் செயலியை உருவாக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.